|
அமெரிக்கா எப்படிப்பட்ட தேசம்!. சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு உலகின் ஒரே வல்லரசாக மிஞ்சிய அமெரிக்கா, ராணுவ பலத்தில் மட்டும் அல்லாமல், பொருளாதார அரங்கிலும் தனிப்பெரும் சக்தியாக அல்லவா விளங்கியது. அமெரிக் காவின் தொழில் வளம் தான் எத்தனை சிறப்பானது. ராக்பெல்ல ரும், ஹென்றி ஃபோர்டும், அமைத்துக் கொடுத்த பாதையில் தான் எத்தனை தொழில் முன்னோடி களும், வர்த்தக சாம்ராஜ்யங்களும் உருவாகி நின்றன.
|
|||||
| . | |||||
|
தொழில் துறையில் மட்டும் தானா புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களும், ஆய்வு அமைப்புகளும் வழிகாட்ட ஆய்வுத் துறையிலும் அல்லவா முன்னிலை வகித்தது.
அமெரிக்கா அதன் வல்லாண்மைக் காகவும், மற்ற நாடுகளின் விஷயங் களில் மூக்கை நுழைப்பதற்கு விமர்சனத்திற்கு ஆளானாலும், உலக விவகாரங் களில் ஆதிக்கம் செலுத்தும் அதிகாரம் அந்நாட்டிற்கு இருந்ததை யார் மறுக்க முடியும். வல்லரசு அமெரிக்கா, எத்தனை அழகாக, தான் போற்றும் மதிப்பு களையும், தனது கொள்கை களையும் உலகின் மீது திணித்து அவற்றை உன்னதமாக பார்க்க வைத்தது. ராணுவ பலம், வர்த்தக நிறுவனங்களின் ஆற்றல், மீடியா மூலமான திட்டமிட்ட பிரச்சாரம் என அமெரிக்கா தன்னைப் பற்றிய கம்பீரமான தோற்றத்தை உருவாக்கி கொண்டு, மற்ற நாடுகளுக்கான முன்னுதாரணமாக காட்டிக் கொண்டது.
டைம் வார்னர், டிஸ்ஸி, ஹாலிவுட், மைக்ரோசாப்ட் ஐ-பாட் என அமெரிக்கா உருவாக்கி தந்த அடையா ளங்கள் தான் எத்தனை எத்தனை!. அமெரிக்கா வளமான தேசமாக மட்டுமா விளங்கியது, வாய்ப்புகளின் தேசமாகவும் அல்லவா கவர்ந்திழுத் தது. சுதந்திர பூமியாக தலை நிமிர்ந்து நின்ற அமெரிக்கா, சொர்க்கத்தில் தங்களது எதிர்காலத்தை தேடி படை யெடுத்த வர்கள் தான் எத்தனை பேர். இந்தியாவில் இருந்து பொறியியல் பட்டதாரிகள், பச்சை அட்டை கனவுகளோடு அமெரிக்காவுக்கு குடியேறினார்கள் என்றால் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் அழையா விருந்தாளிகள் நுழைந்து அமெரிக்கா வில் சட்டவிரோதமாக குடியேறி, வளமான வாழ்க்கையை தேடுகின்றனர். அமெரிக்கா, அதன் வளத்திற்காகவும், ஆற்றலுக்காகவும் இன்றளவும் வியப்போடும் பெருமிதத்தோடும் அல்லவா நோக்கப்பட்டு வருகிறது. அதன் எதிர்ப்பாளர்கள் கூட, அமெரிக்காவை பொறாமையோடு பார்த்தது உண்டே! ஆனால் அந்தோ பரிதாபம் இதெல்லாம் பழங்கதை. இன்று அமெரிக்கா நிலைகுலைந்த தேசமாக உலகின் முன்தலை குனிந்து நிற்கிறது. வீட்டுக் கடன் நெருக் கடியால் ஏற்பட்ட பொருளாதார சீர் குலைவு, அமெரிக்காவை எள்ளி நகை யாட வைத்து விட்டது. நிதி தேவதை களாக கருதப்பட்ட, முதலீட்டு வங்கி களும், வங்கிகளும் தள்ளாடி, தடுமாறி அவற்றில் பல திவாலாகும் நிலைக்கு ஆளாகி தவிப்பதை பார்க்கும் போது அமெரிக்கா அவ்வளவு தானா என்ற கேள்வி எழுவது இயல்பானது தான். ஆனால் இந்த பொருளாதார நெருக்கடியை விட இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அமெரிக்காவின் அடிப்படையான பலவீனங்களும், குறைபாடுகளும் தான் நம்ப முடியாமல் இருக்கின்றன. ஆம் வளமான தேசமாக கருதப்பட்ட அமெரிக்கா மிகப்பெரிய கடனாளி தேசமாக இருப்பதை இப்போது தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் வளம், கடன் வாங் கப்பட்டது என்பதும், அமெரிக்கர்கள் கடன் வாங்கியே செல்வந்தர்கள் போலவும் வாழ்ந்து கொண்டிருக் கின்றனர் என்பதையும் நிதி நெருக்கடி உலகிற்கு உயர்த்தியிருக்கிறது.
அமெரிக்காவை உலுக்கியது வெறும் வீட்டுக்கடன் நெருக்கடி மட்டும்தான் என்றால் கூட அந்நாடு சமாளித்து விடும். ஆனால் அதன் பொருளாதாரம் அடிப்படையில் பலவீனமாக இருப்பதே பிரச்சனை. அமெரிக்க பொருளாதாரம் கடனால் இயங்குகிறது. அமெரிக்கர்கள் மட்டும் அல்ல அமெரிக்க அரசே கூட, கடனில் தான் காலத்தை கழித்துக் கொண்டிருக் கிறது தெரியுமா? நுகர்வோர் கடன், அரசு கடன் என எல்லாமுமாக சேர்த்து அமெரிக்காவின் கடன் 10 லட்சம் கோடி டாலராக இருக்கிறது. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளிடம் ஆண்டு தோறும் 90000 கோடி டாலர் கடன் வாங்குகிறது. அதாவது ஒவ்வொரு நாளும் 250 கோடி டாலர்கள் அமெரிக்காவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை 60,000 கோடி டாலராக இருக்கிறது. நடப்பு கணக்கு என்பது ஒரு குடும்பத்தின் வரவு செலவு கணக்கு போல, இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கான செலவு இது. ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக இருந்தால் பற்றாக்குறை ஏற்படும். ஆனால் அமெரிக்காவோ, இந்த பற்றாக்குறை பற்றி கவலைப்படாமல் மேலும் மேலும் கடன் வாங்கி கொண்டிருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன் சீனாவுடன் அதற்கு நடப்பு கணக்கு பற்றாக்குறை இருக்க வில்லை. இன்றோ, அமெரிக்க அரசு சீனாவிடம் கடன்பட்டிருக்கிறது. சீனா, தைவான், ஜப்பான், வளைகுடா நாடுகள் அமெரிக்க அரசின் கடன் பத்திரங்களை வங்கி வைத் திருக்கின்றன. இந்த பணம் தான் அமெரிக்கர்களின் வாழ்க்கையில் வளம் சேர்த்துக் கொண்டிருக்கிறது- சரியாக சொல்வதானால் அப்படியொரு தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆம் அமெரிக்கா இன்று கடன்பட்டு நிற்கும் தேசம். இது திடீரென தெரிய வந்துள்ள உண்மை அல்ல. அமெரிக்கா நிபுணர்கள் பலர் அந்நாடு பாதை மாறி வருவதையும், கடனைச் சார்ந்து நிற்கும் பொருளாதாரமாக உருவாகி வருவதையும் சுட்டிக் காட்டவே செய்துள்ளனர். அதாவது அமெரிக்காவில் உற்பத் திக்கான முக்கியத்துவம் குறைந்து நிதித்துறை ஆதிக்கம் செலுத்துவதாக நிபுணர்கள் தொடர்ந்து கூறி வந்துள்ளனர். அமெரிக்கா தான் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களை மற்ற நாடுகளிடம் இருந்தே வாங்கி பயன்படுத்த தொடங்கியதால், உற்பத்தி துறை வீழ்ச்சியடைந்தது. 1970-களுக்கு பிறகு அரசு திட்டமிட்டு இதனை ஊக்குவித்தது. அமெரிக்க நிறுவனங்களும் உற்பத்தி செலவு குறைவான நாடுகளுக்கு தொழிற்சாலைகளை மாற்றிக் கொண்டன. உற்பத்திக்கு பதிலாக அரசு நிதித்துறை செயல்பாடுகளையே ஊக்குவித்தது. அமெரிக்காவின் ஏற்றுமதியும் குறைந்து இறக்குமதியே அதிகரித்தது. அமெரிக்கா தான் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களை பிற நாடுகளிடம் இருந்தே வாங்கி குவித்தது. இதனால் ஏற்படக் கூடிய நிதி பற்றாக்குறை அரசு வாங்கிய கடன் மூலம் சுலபமாக சரி செய்யப்பட்டன. வங்கிகளும் முதலீட்டு வங்கிகளும், நிதி பெருக்கத்தில் ஈடுபட்டு, பங்குச் சந்தையில் பணம் புரளச் செய்து, செல்வச் செழிப்பான தோற்றத்தை கொடுத்தன. அமெரிக்கர்களும்கடன் அட்டை மூலம் பொய்யான வாங்கும் திறனை பெற்று மகிழ்ந்து கொண்டிருந்தனர். ஆனால் எல்லாவற்றிற்குமே கடன் தான் அடிப்படையாக இருந்தது. அமெரிக்க சந்தை திறந்து விடப் பட்டிருந்ததால், கொரியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் தங்கள் பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து விட்டு, அந்த நம்பிக்கையில் அந்நாட்டு கடன் பத்திரங்களை தாராளமாக வாங்கி கொண்டன. அதாவது அமெரிக்கா, இறக்குமதிக்கான செலவுக்கு அந்நாடுகளிடம் இருந்தே கடன் வாங்கி வந்தது. டாலரின் பலம் அமெரிக்காவின் சக்தியும் இதற்கு கை கொடுத்தன. இது போதாது என்று அமெரிக்க நிதித்துறையும், வீட்டுக்கடனை வாரி வழங்கி அந்த கடனையே பத்திரங்களாக மாற்றி உலகை அவற்றில் முதலீடு செய்ய வைத்து, பணப்புழக்கத்தை உச்சத்துக்கு கொண்டு சென்றன. இப்போது அமெரிக்கா தனது கடனில் 40 சதவீதத்தை வெளிநாட்டு வங்கிகளிடம் இருந்து பெற்று வருகிறது. அதன் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவிகிதம் வெளிநாட்டு கடனாக இருக்கிறது. ஒரு காலத்தில் அமெரிக்கா, உலகிற்கே படி அளக்கும் தேசமாக இருந்தது. இன்றோ அது உலகின் மிகப்பெரிய கடனாளி தேசமாக உள்ளது. ஒரு வல்லரசு எப்படி கடனாளி தேசமாகவும் இருக்க முடியும். அமெரிக்க நிதித்துறையின் ஆதிக்கம் கேள்விக்குள்ளாகி இருக்கும் நிலையில், அமெரிக்காவின் பொருளாதார பலமும் ஆட்டம் கண்டுள்ளது. அமெரிக்காவின் அரசு பத்திரங்களை வாங்கி வைத்துள்ள நாடுகள், அதனை திருப்பிக் கேட்டால் அமெரிக்காவின் நிலை என்னாகும்? அப்படியொரு நெருக்கடி அமெரிக்காவுக்கு ஏற்படாவிட்டாலும், அது தான் வாங்கிய கடனை, மதிப்பு குறைந்த டாலரில் திருப்பி செலுத்த நேர்ந்தாலே பெரும் இழப்பு ஏற்படுமே. 1600-களில் டச்சு பேரரசு, 1700-களில் ஸ்பெயின் பேரரசு, 1800-களில் ஆங்கிலேயே பேரரசு இதே நிலைக்கு ஆளாகி முடிவுக்கு வந்ததாக வரலாறு சொல்கிறது. இதே நிலை அமெரிக்காவுக்கு ஏற்படலாம் |
|||||
-
தேடுக!
-
சமீபத்திய உள்ளீடுகள்
- ஒருவல்லரசு கடனாளியான கதை -29
- நாட்டை அழித்த வங்கிகளின் வளர்ச்சி -28
- முடிவுக்கு வரும் அமெரிக்க பேரரசு -27
- ஒரு நிபுணரின் வாக்கு பலித்தது -26
- வருமுன் உரைத்த நிபுணர் -25
- கடனில்லா தேசம் செய்வோம்!
- சேமிப்பின் அருமை கடனில் தெரியும்-23
- கடனே தான் வாழ்க்கையடா -22
- வீதிக்கு வந்த அமெரிக்கர்கள் -21
- கந்துவட்டி கார்ப்பரேட் மயமானது -20
-
இணைப்புகள்